அமெரிக்க மத்திய கமாண்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, முக்கிய நீர்வழியாகக் கருதப்படும் ஹார்முஸ் பகுதியில் பயணிக்கும் போர்க்கப்பல்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஈரானிய ராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
எனினும், இந்தத் தாக்குதலில் ஈரானின் நிலப்பகுதிகளும், ஹார்முஸ் பகுதிக்குள் நுழைந்த இரு கப்பல்களும் இலக்கு வைக்கப்பட்டதாக ஈரான் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த மோதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய தாக்குதல் படையினர் அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“ஈரான் விரைவில் அமைதி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்காவிட்டால், இதைவிடக் கடுமையான மற்றும் வன்முறையான பதிலடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்த அவர், இந்தத் தாக்குதலை ஒரு சிறிய ‘அன்பான தட்டல்’ என்று வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல்; டிரம்ப் கொடுத்த ‘வார்னிங்’
