ஈரான் போர்: அணுசக்தி ஒப்பந்தம் இன்றி வெளியேற டொனால்ட் டிரம்ப் திட்டம்?  

Estimated read time 0 min read

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக மக்களுக்கு அறிவிக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்தம் ஏதுமின்றி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறும் யோசனையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நாங்கள் ஈரானுடனான இந்த மோதலின் நடுப்பகுதியில் இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் மீது அமெரிக்கா தொடர்ந்து தூதரக மற்றும் பொருளாதார அழுத்தங்களை கொடுக்கும் என்றும், அமெரிக்க மக்கள் குறைந்த விலையில் எரிபொருளைப் பெறுவதை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author