சீனாவின் நீதி சட்டம், வழக்கறிஞர் மற்றும் பொது பாதுகாப்பு பற்றி ஷி ச்சின்பிங் கட்டளை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ கமிட்டித் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் சீனாவின் நீதி சட்டம், வழக்கறிஞர் மற்றும் பொது பாதுகாப்பு பணிகள் பற்றி முக்கிய கட்டளையிட்டார்.


தொடர்புடையத் துறைப் பணியாளர்கள் நீதி சட்டம், வழக்கறிஞர் மற்றும் பொது பாதுகாப்புத் பணிகளின் நவீனமயமாக்கம் மூலம், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்துக்கு ஆதரவும் சேவையும் அளிக்க வேண்டும்.

வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சி இலட்சியத்தை பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கு வலிமைமிக்க உத்தரவாதத்தை வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, சமூக நிதானம் மற்றும் பொது மக்களின் சட்டப்பூர்வ உரிமை மற்றும் நலனை உறுதியாக பேணிக்காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உயர் நிலையிலான பாதுகாப்பு மூலம் உயர் தர வளர்ச்சியை உத்தரவாதம் செய்து, சோஷலிச சந்தை பொருளாதார ஒழுங்கு முறையை சட்டத்தின்படி பேணிக்காத்து, சட்ட ஒழுங்கான வணிகச் சூழல் கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author