சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வங்கள் மீதான பாதுகாப்பு, பரம்பரை, பயன்பாட்டுப் பணி குறித்து முக்கிய உத்தரவு விடுத்துள்ளார்.
பெய்ஜிங் மைய அச்சுப் பகுதி, பாடான்ஜிலின் பாலைவனம், சீனாவின் மஞ்சள் மற்றும் போ கடல் பகுதியில் புலம் பெயரும் பறவை தங்குதல் இடம் ஆகியவை, உலக மரபுச் செல்வப் பெயர் பட்டியலில் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுள்ளன.
பொருளாதார மற்றும் தார்மீக நாகரிகத்தின் இசைவான வளர்ச்சிக்கும், மனிதரும் இயற்கையும் நல்லிணக்கமாக பழகும் தனிச் சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தை உருவாத்துவதற்கும் இது ஆக்கப்பூர்வமான முக்கியத்துவம் வாய்ந்தது. தவிரவும், இது, உலகில் பல்வேறு நாகரிகங்களைச் செழிப்பாக்கும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
உலக மரபுச் செல்வப் பெயர் பட்டியலில் வெற்றிகரமாக சேர்க்கப்படுவதன் மூலம், பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வத்தின் ஒருமைப்பாடு மற்றும் ஒட்டுமொத்த ரீதியில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.
மரபுச் செல்வப் பாதுகாப்பு ஆற்றலையும் நிலையையும் உயர்த்த வேண்டும். சீனத் தேசத்தின் பண்பாடு மற்றும் இயற்கை செல்வங்களை நன்றாக பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.