நவம்பர் 18ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள், பெய்ஜிங் மாநகரில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்தாலோசனையை நடத்தினர். ஜப்பானிய தலைமை அமைச்சர் டாகாய் சானாய் அண்மையில் தைவான் பற்றி ஆத்திரமூட்டல் கூற்றை வெளியிட்டு, தைவான் நீரிணையில் இராணுவம் மூலம் தலையீட்டை நடத்தும் சாத்தியம் இருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்தமைக்கு இச்சந்திப்பின் போது சீனத் தரப்பு மீண்டும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. தவறான கூற்றுகளைத் திருத்திக் கொண்டு, சீனாவுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், நடைமுறை செயல்களின் மூலம், தப்புகளைத் திருத்தம் செய்து, சீன-ஜப்பானிய உறவுக்கான அரசியல் அடிப்படையைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு முன், சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் அண்மையில், சீனாவுக்கான ஜப்பானியத் தூதரை வரவழைத்து, ஜப்பான் தலைமையமைச்சரின் தவறான கூற்றுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
2ஆவது உலகப் போரின் வெற்றிக்களிகனையும் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கையும் உறுதியாகப் பேணிக்காத்து, ஜப்பானிய இராணுவவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.
