அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் போர் நிறுத்த நடவடிக்கையில் இறங்கிய டிரம்ப்  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே உலகில் நடைபெற்று வரும் போர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க போவதாக கூறி இருந்தார்.
அந்த வகையில் தற்போது அதிபராக வெற்றி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 7 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு தலைவர்களும் உக்ரைனின் நிலைமை குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது, மேலும் மோதலை அதிகரிப்பதைத் தவிர்க்குமாறு டிரம்ப் புடினை வலியுறுத்தினார் எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
அந்த உரையாடலின் போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தையில் ஈடுபடத்தயாராக இருப்பதாகவும் , அமெரிக்க-ரஷ்யா உறவுகளை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author