சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸுடன் 14ஆம் நாள் பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனாவும் பாலஸ்தீனமும் பரஸ்பர நம்பிக்கையுடன், ஒருவரையொருவர் ஆதரிக்கும் நல்ல நண்பர்களாவர். உலகின் நூற்றாண்டு மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கின் நிலைமையின் புதிய மாற்றங்களை எதிர்கொண்டு, பாலஸ்தீனத்துடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகின்றது.
பாலஸ்தீனப் பிரச்சினையைப் பன்முகங்களிலும் நியாயமாகவும் நிலையாகவும் தீர்ப்பதை முன்னேற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
இது பற்றி அவர் விரிவான மூன்று கருத்துக்களை முன்வைத்தார். சீனாவுக்கும் பாலஸ்தீனத்துக்குமிடையிலான நெடுநோக்குக் கூட்டாளி உறவு நிறுவப்பட்டதை இரு தரப்பினரும் அறிவித்தனர்.