2024ஆம் ஆண்டில் சீனாவின் பற்றிய பெரு நாட்டு மக்களின் அனுகூலம்” பற்றிய கருத்து கணிப்பு ஆய்வு

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் பெருவில் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் சீன ஊடக குழுமத்தைச் சேர்ந்த CGTN, பெரு நாட்டின் தேசிய உயர்நிலை ஆய்வு மையத்துடன் இணைந்து “2024ஆம் ஆண்டில் சீனாவின் பற்றிய பெரு நாட்டு மக்களின் அனுகூலம்” பற்றிய கருத்து கணிப்பு ஆய்வு ஓன்றை நடத்தியது.

இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் சீனாவிற்கும் பெருவிற்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவு மற்றும் பயனுள்ள ஒத்துழைப்புக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
பதிலளித்தவர்களில் 89.6 விழுக்காட்டினர் சீனாவுக்கு சாதகமான கருத்தைத் தெரிவித்தனர்.

சீனா உலகளவில் ஒரு முக்கியமான நாடாகும் என்று 97.7 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீனா ஒரு வெற்றிகரமான நாடு என்று 97.2 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீனா ஈர்ப்பு ஆற்றல் கொண்ட நாடாக இருப்பதாக 91.5 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author