‘ராமாயணம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீடு: ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் கூட்டணி அசத்தல்  

Estimated read time 1 min read

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிட்டுள்ளனர்.
பிரம்மாண்டமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது உலகளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
4 நிமிடங்கள் 9 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லரில், நடிகர் யாஷ் ‘ராவணன்’ கதாபாத்திரத்தில் தோன்றி, “மூன்று உலகங்களுக்கும் ஒரே ஒரு ராஜா தான் இருப்பான்” என்று முழங்கும் அதிரடி காட்சிகளுடன் தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரிக்கும் ‘ராமராக’ ரன்பீர் கபூர் குதிரையேறி வரும் காட்சிகளும், அயோத்தி மன்னர் தசரதராக அருண் கோவில் மற்றும் கைகேயியாக லாரா தத்தா ஆகியோரின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

You May Also Like

More From Author