ஸ்விட்சர்லாந்தில் தீ விபத்து குறித்து ஷி ச்சின்பிங் ஆறுதல்

ஸ்விட்சர்லாந்தின் வலைஸ் மாநிலத்தின் மதுவகம் ஒன்றில் தீ விபத்து குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜனவரி 4ஆம் நாள், அந்நாட்டின் அரசுத் தலைவர் கய் பார்மெலினுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், ஸ்விட்சர்லாந்தின் வலைஸ் மாநிலத்தின் கிரான்ஸ்-மொன்டானா வட்டத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஆழந்த இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆறுதல் தெரிவித்தார். மேலும், காயமுற்றவர்கள் வெகு விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author