சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்தியக் கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு குறித்து 24ஆம் நாள் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பது பற்றிய மத்திய கமிட்டியின் முன்மொழிவுகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றியது இம்முழு அமர்வின் மிக முக்கியமான சாதனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஐந்தாண்டு திட்டத்தை அறிவியல்பூர்வமாக வகுத்து தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் முக்கியமான அனுபவங்களில் ஒன்றாகும். இது சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசத்தின் முக்கிய அரசியல் சாதகமுமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பது பற்றிய மத்தியக் கமிட்டியின் முன்மொழிவுகளின் கோரிக்கையின்படி, பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொள்வதில் ஊன்றி நிற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதைக் கருப்பொருளாகக் கொண்டு சீர்த்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை அடிப்படை உந்து ஆற்றலாகக் கொள்வதில் ஊன்றி நிற்க வேண்டும்.
அருமையான வாழ்க்கை மீது நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதை அடிப்படை நோக்கமாகக் கொள்ள வேண்டும். சோஷலிச நவீனமயமாக்கலை நனவாக்குவதற்குரிய தீர்மானகரமான முன்னேற்றங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலிமையான உள்நாட்டுச் சந்தை, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்திற்கான அடிப்படையாகும். சீனத் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான முன்மொழியில் உள்நாட்டுத் தேவைகளைத் தொடர்ந்து விரிவாக்கும் அடிப்படை நெடுநோக்குத் திட்டத்தில் ஊன்றி நின்று, 3 முக்கிய துறைகள் சார்ந்து உரிய கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அங்கீகலிக்கப்பட்ட இந்த முன்மொழிவு ஆவணத்தில், புதிதாக வளர்ந்து வரும் ஆதாரத்தூண் தொழில் துறையை வளர்த்தல், புதிய எரியாற்றல், புதிய பொருட்கள், விண்வெளி, குறைந்த உயரத்தில் வான்வழி பொருளாதாரம் உள்ளிட்ட நெடுநோக்கு வாய்ந்த புதிதாக வளரும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தல் முதலிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதன் விளைவாக, இலட்சம் கோடி யுவான் மதிப்பிலான பெரிய அளவிலான சந்தை வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
