ஆடிப்பெருக்கு – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Estimated read time 1 min read

வார இறுதி நாட்கள் & ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 31ம் தேதி 420 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆக. 1ம் தேதி 330 பேருந்துகளும், 2ஆம் தேதி 270 பேருந்துகளும் இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31ம் தேதி 120 பேருந்துகள் இயக்கப்படும். ஆக.1ம் தேதி 120 பேருந்துகளும், 2ஆம் தேதி 55 பேருந்துகளும் இயக்கப்படும். மாதவரத்திலிருந்து ஜூலை 31 மற்றும் ஆக. 1 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி, தி.மலை, போளூர் & புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 45 சிறப்பு பேருந்துகளும், 2ம் தேதி 50 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author