ஷிச்சாங்கில் முதலாவது மாநில அளவிலான நாடக அரங்கு திறப்பு

பழைய ஷிச்சாங் எனும் நாடகம் டிசம்பர் 15ஆம் நாள் ஷிச்சாங் பெரிய நாடக அரங்கில் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டது. ஷிச்சாங் தன்னாட்சி பிரதேசத்தில் முதலாவது மாநில அளவிலான நாடக அரங்கு அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதை இது காட்டுகிறது.


ஷிச்சாங் பெரிய நாடக அரங்கின் கட்டுமானப் பணி 2019ஆம் ஆண்டில் தொடங்கியது. அதன் கட்டிட பரப்பளவு 36 ஆயிரம் சதுர மீட்டருக்கும் மேலாகும். ஹன், தாங் ஆகிய வம்சக்கால கட்டிடப் பாணியை முக்கியமாக கொண்ட இந்த அரங்கில், ஷிச்சாங் கட்டிட கலையின் சிறப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.


ஷிச்சாங்கின் பாரம்பரிய கலையை பாதுகாத்து, பரவல் செய்து, வளர்ப்பது, தலைசிறந்த பாரம்பரிய கலையின் புத்துணர்வு வாய்ந்த மாற்றம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவது, பல்வேறு இன மக்களின் கலாச்சார வாழ்க்கையைச் செழுமைப்படுத்துவது ஆகிய துறைகளில் இந்த அரங்கு முக்கிய பங்காற்றும் என்று ஷிச்சாங் பண்பாட்டுப் பணியகத்தின் கட்சிக் குழு செயலாளர் சியாவ் சுவான்ஜியாங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author