தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 26) முதல் வரும் ஜூன் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக உள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், அருகிலுள்ள மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 9 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், சின்கோனா, சோலையார், பார்சன்ஸ் பள்ளத்தாக்கு, அவலாஞ்சி மற்றும் மேல்பவானி பகுதிகளில் 6 முதல் 7 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 28 வரை இடியுடன் மழை பெய்யக்கூடும்
