சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 4ஆம் நாள் முற்பகல், அஸ்தானாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் கூட்டத்தில் பங்கெடுத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில்,
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 23 ஆண்டுகளுக்குப் பின், உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்து, கூட்டாளிகள் தொடர்ந்து அதிகரித்து, ஒத்துழைப்பு அடிப்படை மேலும் வலிமையாக உள்ளது.
பனிப் போர் எனும் தற்போதைய நடைமுறை அச்சுறுத்தலை எதிர்நோக்கும் போது, பாதுகாப்பின் அடிப்படையைப் பேணிக்காக்க வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பின் மூலம், சிக்கலான பாதுகாப்பு அறைகூவல்களைச் சமாளித்து, நீண்டகால அமைதி மற்றும் பொதுவான பாதுகாப்பு வாய்ந்த உலகத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும்.
நாங்கள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து, சொந்த நாட்டின் விதிமுறை, பிரதேசத்தின் அமைதியான வளர்ச்சி, சொந்த கைகளில் வைக்க வேண்டும் என்றார் அவர்.