பட்டியல் தயாரிப்பில் பாரதிய ஜனதா தீவிரம்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. வெளியேறிவிட்ட நிலையில் பா.ஜனதா தனித்தே நிற்கிறது.

இந்நிலையில் தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தகுதியானவர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் பா.ஜனதா தலைவர் நட்டா தமிழகம் வருகிறார். அதற்குள் பட்டியலை தயார் செய்து அவரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மதுரையில் பிரதமர் மோடியை தேனி எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சந்தித்து பேசினார்.

தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிடவும் அதற்கு பா.ஜனதா ஆதரவை கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

You May Also Like

More From Author