அதிமுக – திமுக ரகசியக் கூட்டணியா? ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை  

Estimated read time 1 min read

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில அரசியலில் இதுவரை கண்டிராத பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
ஒருபுறம் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் நிலையில், மறுபுறம் திமுக மற்றும் அதிமுக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியாகும் தகவல்கள் களத்தைக் சூடாக்கியுள்ளன.
நேற்றிரவு முதல் ஊடகங்களில் ஒரு பரபரப்பான செய்தி வெளியாகி வருகிறது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க, திமுக-வின் வெளி ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்காக இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களும் நேற்று பல மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும், அதிமுக எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author