அதிக மருத்துவ சீட்டுகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் 12 ஆயிரத்து 545 இளங்கலை மருத்துவ இடங்களை கொண்டு கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது, இதற்கு அடுத்தபடியாக 12 ஆயிரத்து 425 இளங்கலை மருத்துவ இடங்களுடன் உத்தரபிரதேச மாநிலம் 2வது இடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் கடந்த 2023-24ம் கல்வியாண்டில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 12 ஆயிரத்து 50 இளங்கலை மருத்துவ இடங்களுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலிலும் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் 86 மருத்துவ கல்லூரிகளுடன் உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், 77 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழ்நாடு தற்போது 3வது இடத்தில் உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், அதன்பிறகு புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.