சீன-இந்திய எல்லை பிரச்சினை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் டிசம்பர் 16-ஆம் நாள் கூறுகையில், அண்மையில், சீன-இந்தியத் தலைவர்கள் ரஷியாவின் கசான் நகரில் சந்திப்பு நடத்தினர்.
இரு நாட்டு எல்லை பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் அமைப்புமுறையின் பங்குகளைச் செவ்வனே ஆற்றுவது குறித்து இரு தரப்பினரும் முக்கிய ஒத்தக் கருத்துகளை எட்டியுள்ளனர்.
தற்போது, இப்பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் புதிய கூட்டம் குறித்து இரு தரப்பும் நெருக்கமாக தொடர்பு மேற்கொண்டு வருகின்றன. புதிய தகவல்கள் இருந்தால், சீனா காலதாமதமின்றி வெளியிடும் என்று தெரிவித்தார்.