சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் டிசம்பர் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளரும், சீனத் தேசிய பொருளாதாரத்தின் பன்நோக்குப் புள்ளிவிபரப் பிரிவின் தலைவருமான ஃபூலிங்குய் 2024ஆம் ஆண்டின் நவம்பரில் தேசியப் பொருளாதாரத்தின் இயக்க நிலைமை குறித்து அறிமுகபடுத்தினார்.
2024ஆம் ஆண்டு முழுவதிலும், மொத்த தானிய உற்பத்தி அளவு 70 கோடியே 65 இலட்சம் டன்னை எட்டி, கடந்த ஆண்டை விட 11 இலட்சத்து 90 ஆயிரம் டன்னாக உயர்ந்து, 1.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தானிய உற்பத்தி 70 கோடியைத் தாண்டுவது என்பது இது முதன்முறையாகும்.
நவம்பரில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த அதிகரிப்புத் தொகை 5.4 விழுக்காடாக உயர்ந்தது. இவ்விகிதம் அக்டோபரில் இருந்ததைக் காட்டிலும் 0.1 விழுக்காடு புள்ளி அதிகம். கடந்த திங்கள்காலத்தில் 0.46 விழுக்காடு உயர்ந்துள்ளது.
தேசிய சேவை துறையின் உற்பத்தி குறியீடு, கடந்த ஆண்டை விட 6.1 விழுக்காடு அதிகம். சமூகத்தின் நுகர்வுப் பொருட்களின் விற்பனை தொகை 4 இலட்சத்து 37 ஆயிரத்து 630 கோடி யுவானாக, கடந்த ஆண்டை காட்டிலும் 3.0 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த திங்கள்காலத்தில் இது 0.16 விழுக்காடு உயர்ந்துள்ளது.
சரக்கு பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 3 இலட்சத்து 75 ஆயிரத்து 60 கோடி யுவானாக, கடந்த ஆண்டை விட 1.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலை குறியீடு கடந்த ஆண்டை விட 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது கடந்த திங்கள்காலத்தில் இருந்ததை விட 0.6 விழுக்காடு உயர்ந்துள்ளது.
சீன ஆக்க தொழில் உற்பத்தியாளர் விலைக் குறியீடு, கடந்த ஆண்டை விட 2.5 விழுக்காடு குறைந்துள்ளது. இதன் குறைப்பு விகிதம், அக்டோபரில் இருந்ததை விட 0.4 விழுக்காடு புள்ளி குறைந்துள்ளது. கடந்த திங்கள்காலத்தில் இருந்ததை விட 0.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.