கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வருகிற திங்கட்கிழமை போகி பண்டிகை செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகை, புதன்கிழமை மாட்டுப்பொங்கல் மற்றும் கானும் பொங்கல் என தொடர்ந்து செவ்வாய் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் கார் வேன் மற்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இதேபோல் இன்றும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோங்கல் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள், மீண்டும் சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.