சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஐரோப்பிய பேரவைத் தலைவர் கோஸ்டாவுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். ஐரோப்பிய பேரவையின் தலைவராக மீண்டும் பதவி ஏற்ற கோஸ்டாவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பா, பலதுருவமயமான உலகின் ஒரு முக்கிய பகுதியாகும். ஐரோப்பிய ஒருமைப்பாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெடுநோக்கு தற்சார்புக்கு சீனா ஆதரவு அளிக்கிறது.
சீனாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே அடிப்படை மோதலோ, புவிசார் அரசியல் முரண்பாடோ இல்லை. இரு தரப்பும் ஒன்றுக்கொன்று நலன் தரும் கூட்டாளி நாடுகளாகும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல், சீன-ஐரோப்பிய உறவு, தத்தமது வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலக அமைதி மற்றும் செழுமைக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.
சீனா, உயர்தர வளர்ச்சியில் ஊன்றி நின்று, வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்குவது, சீன-ஐரோப்பிய ஒத்துழைப்புக்குப் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும். இரு தரப்பும் ஒன்றுக்கொன்று திறப்பு அளவை விரிவாக்கி, ஒத்துழைப்பு முறைமையை வலுப்படுத்தி, ஒத்துழைப்பின் புதிய அதிகரிப்பு துறையை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.