இன்று மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இன்றைய நாள் மாலையில் பொன் னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது.
மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக் கப்படும் திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்படும் நிலையில், செவ் வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் சன்னிதானத்தை அடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கடும் கட்டுப்பாடு மகரவிளக்கு பூஜைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு கடுமையான அளவில் உள்ளது.
காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து இயக்கம் இருக்கும். 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. ஜனவரி 19ஆம் தேதி இரவு 10 மணி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.
அன்று வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். 20ஆம் தேதி காலை 7 மணிக்கு சபரிமலை கோவில் நடை சாத் தப்படும். அன்றுடன் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடையும். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.
5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். நெரிசல் ஏற்படாமல் இருப்ப தற்காக ஆன்லைனில் 50,000, ஸ்பாட் புக்கிங்கில் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15ஆம் தேதி ஆன்லைன் புக்கிங்கில் 60,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி முதல் வழக்கமான முறையில் புக்கிங் நடை பெறும் என திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பில் கூறியுள்ளது.