2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியின் உலக சேவை வர்த்தக மாநாடு செப்டம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
வெளிநாட்டு திறப்பு பணி, உலக பொருளாதாரத்துக்கு பங்காற்றும். இல்லாவிட்டால், வீழ்ச்சியடையும். உயர் நிலை வெளிநாட்டு திறப்புப் பணியைச் சீனா தொடர்ந்து முன்னேற்றும் என்று அவர் தெரிவித்தார்.
உலக சேவை வர்த்தக வளர்ச்சி வாய்ப்புகளை உலக பல்வேறு நாடுகள் கூட்டாக பகிர்ந்து கொண்டு, உலக பொருளாதார மீட்சியை முன்னேற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உலக வர்த்தக அமைப்பின் தீர்மானத்தின் படி, சேவை வர்த்தகத்தில் 12 வகைகள் உள்ளன. இப்போது சேவைத் துறை உலக பொருளாதாரத்தின் தூணாக மாறியுள்ளது.
இவ்வாண்டு, சீன சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். சீன தொழில் நிறுவனங்கள் உள் நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளைப் பயன்படுத்துவதற்கும், அன்னிய தொழில் நிறுவனங்கள், சீன சந்தையில் புகுவதற்கும் இப்பணி வாய்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.