மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!

மியான்மரில் 4.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மரின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

You May Also Like

More From Author