ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே வருடக்கணக்கில் நீடித்து வரும் போர் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இலக்காகக் கொண்டு, ரஷ்ய ராணுவம் நள்ளிரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதிநவீன பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை ஏவி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட 11 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 54க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் க்ளிமென்கோ அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல்! 11 பேர் பலி
Estimated read time
0 min read
