சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறையை பொதுத்துறை வங்கிகள் கைவிட திட்டமிட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி அளிக்கவும், வங்கிகளின் சேவை முறைமையை நேர்த்தியாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான தனியார் வங்கிகள், சம்பள கணக்குகள் அல்லது பிக்சட் டெப்பாசிட் வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதிக்கவில்லை.
இதனால், பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளை மக்கள் அதிகம் தேர்வு செய்யும் வங்கியாக காணப்படுகிறது.
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டாயம் இல்லையா? -அபராத நடைமுறையை கைவிடும் வங்கிகள்
