சாவோ டோமே மற்றும் பிரின்சிபி குடியரசுத் தலைவராக மீண்டும் பதவியேற்ற கர்லோஸ் நோவாவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 29ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அதில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டுறவு சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி வருகிறது. சீன- சாவோ டோமே மற்றும் பிரின்சிபி உறவுக்கு நான் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறேன். அரசுத் தலைவர் நோவாவுடன் இணைந்து சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டின் சாதனைகளை நடைமுறைப்படுத்துவதை வாய்ப்பாகக் கொண்டு இரு நாட்டின் நெடுநோக்குக் கூட்டாளியுறவை புதிய நிலைக்குக் கொண்டு வந்து இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
