வார விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் திற்பரப்பு அருவிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் வார விடுமுறையை ஒட்டி அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.