சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிப்ரவரி 15-ஆம் நாள் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 38-ஆவது உச்சி மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இச்செய்தியில் அவர் கூறுகையில், தற்போதைய சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், சீனா மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதியாக கொண்ட உலகளாவிய தெற்கு நாடுகள் வளர்ச்சியடைந்து வருகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளும், ஆப்பிரிக்க மக்களும், தற்சார்ப்பு மற்றும் வளர்ச்சிப் பாதையில் மேலதிக புதிய சாதனைகளைப் பெற வேண்டும் என வாழ்த்தினார்.
மேலும், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றக்கூட்டம் 2024ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இருதரப்பும் புதிய யுகத்தில் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்க முனைத்துள்ளன.
ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து, நவீனமயமாக்கத்தை முன்னேற்றுக்கான 6 முன்மொழிவுகள், 10 கூட்டாளி நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்னேற்றி, சீன மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்கு நன்மை புரிய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.