சீன ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில் “வசந்த கால சீனா: சீனாவிலுள்ள வாய்ப்புகளும் உலகுடனான பகிர்வும்’’ என்னும் தலைப்பிலான உலகளாவிய பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் கூட்டம் மார்ச் 14ஆம் நாள் கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் நடைபெற்றது.
இதில் சீனக் கம்யூனிஸ்ட்க் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கசகஸ்தானுக்கான சீனத் தூதர் ஹான் சுன்லின், கசகஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர் அபிலி உள்ளிட்ட இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறையினர்கள் கலந்து கொண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.