போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது என வாடிகன் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிசுக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நுரையீரலில் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
தற்போது, போப் பிரான்சிஸ்-க்கு மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.