பாம்பன் புதிய பாலத்தை திறக்க பிரதமர் மோடி வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ராமேஸ்வரத்தில் கடலுக்கு மேலே 550 கோடி ரூபாய் செலவில் 2.05 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை வழித்தடத்தில் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலப்பகுதிக்கும், ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடலை வெறும் 5 நிமிடங்களில் கடக்க இந்த பாலம் வழிவகை செய்கிறது.
இது பழைய பாலத்தை கடக்க எடுத்துக் கொள்ளப்பட்ட 25-30 நிமிடங்களை விட மிகவும் குறைவாகும். புதிய பாலத்தில் சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பாஜகவினரும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பழமையும், தொன்மையும் நிறைந்த ரயில் பாலம் பிரதமரால் திறந்து வைக்கப்படுவது மகிழ்ச்சி என்றும், பாம்பன் பாலத்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் எனவும் கூறியுள்ளனர்.