சென்னையில் நாளை முதல் உலக சினிமா விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 146 குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் திரையிடப்படும்.
சென்னை உலக சினிமா அறக்கட்டளை ஏற்பாடு செய்து, சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை தொடக்க விழாவுடன் தொடங்குகிறது.
சென்னை உலக சினிமா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 112 நாடுகளைச் சேர்ந்த 3,321 குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்து திரையிடப்பட உள்ள திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சுமார் 20 திரைப்பட கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், வெனிசுலா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்த கலைஞர்கள் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருப்பார்கள்.