அமெரிக்காவின் ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனத்தின் செயலி கடையில் டிக்டாக் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக டிக்டாக் சமூக ஊடகம் பிப்ரவரி 14ஆம் நாள் உறுதிப்படுத்தியது.
அமெரிக்காவின் பயன்பாட்டாளர்கள் புதிய பதிப்பான டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்து, காணொளிகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று டிக்டாக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க சட்ட நீதி அமைச்சர் அளித்த உத்தரவாதத்தைப் பெற்றதற்குப்பின், ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் TikTok-ன் சேவையை மீண்டும் துவங்கின என்பது குறிப்பிடத்தக்கது