பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Estimated read time 1 min read

பிரதமர் மோடி வருகையையொட்டி, ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வரும் 6-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4-ஆம் தேதி 6-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகளை வேறு பகுதிக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author