சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹாமி எனும் நகரில் அண்மையில் கோபி பாதுகாப்புப் பணி தொடங்கப்பட்டது. இப்பணியின் மூலம் கோபி சரளைக்கல் அடுக்கின் பூர்வாங்க மீட்புத் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தரவின்படி, ஹாமி நகரில் கோபி நிலப்பரப்பு 94ஆயிரத்து 600 சதுர கிலோமீட்டரை எட்டியுள்ளது. இது நகரின் மொத்தப் பரப்பளவில் 66.57விழுக்காடாகும். பொதுவாக இப்பகுதி வறட்சி மற்றும் குறைந்த மழைப்பொழிவு கொண்டதாகும். கடந்த சில ஆண்டுகளாக கோபி பகுதியில் ஏற்பட்டு வரும் மனிதச் செயல்பாடுகளின் அதிகரிப்பால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவான சரளைக்கல் அடுக்கு சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் மறைமுக மணல் மூலாதாரம் உண்மையான மணல் மூலாதாரமாக மாறக் கூடும்.
பூர்வாங்க மீட்புத் திட்டம் மூலம், கோபி உயிரின சுற்றுச்சூழலின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு உயிரின சூழலின் சமநிலை பேணிக்காக்கப்படும்.