இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தன்னுடைய கணவரை மீட்டு தரக் கோரி பெண் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கனிஷ்கா என்பவரின் கணவர் கடந்த டிசம்பர் மாதம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு இலங்கை நீதிமன்றம் ஆறு மாத சிறை தண்டனையும், 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னுடைய கணவரை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் கனிஷ்கா மனு அளித்தார்.