புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த 2021-ம்ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் வெற்றியை அடுத்து, சுகுமார் இயக்கி வரும் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே எகிறியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரசியமாக மேற்கூறிய ஐந்து மொழிகளை தாண்டி, இப்படம், வங்க மொழியிலும் நேரடியாக வெளியாகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author