புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்ற தலைப்பில், சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் கூட்டம் அண்மையில் லாவோஸ், இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் வேலாசிங்கா கூட்டத்தில் கூறுகையில், ஆசியா வரலாற்றின் புதிய துவக்கப் புள்ளியில் நின்று, முன்னென்றும் கண்டிராத வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்நோக்குகிறது. சீர்திருத்தத்தை சீனா பன்முகங்களிலும் ஆழமாக்குவதால் ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகளை இலங்கை சீராக இறுகப்பற்றி, மேலும் பெரிய வளர்ச்சியடைய வேண்டும் என்று தெரிவித்தார்.
லாவோஸின் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்திய கமிட்டியின் துணை செயலாளர் கூறுகையில், புதிய யுகத்தில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு மூலம் சீனாவுக்கு கிடைக்கும் மாபெரும் சாதனைகள் மற்றும் அரிய அனுபவங்களை லாவோஸ் இளைஞர்கள் ஆழமாக புரிந்து கொண்டு, நாட்டின் கட்டுமானத்தில் தங்களது ஞானத்தை வெளிக்கொணர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்
இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தின் ஆசியான்-சீன ஆய்வு மையத்தின் தலைவர் கூறுகையில், எதிர்காலத்தில் ஆசியாவின் வளர்ச்சிக்கு இப்பிரதேசத்தின் நாடுகளின் கூட்டு முயற்சிகள் தேவை. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சியை சீனாவும் ஆசியான் நாடுகளும் முன்னேற்றி, மேலதிக ஒத்துழைப்பு துறைகளை விரிவாக்குவதை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.