ஐபிஎல் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்த வாருங்கள் : இங்கிலாந்து அழைப்பு..!

Estimated read time 0 min read

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக போட்டிகளை நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது சாத்தியமில்லை என்றும், அனேகமாக ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடத்தலாம் என்றும் கூறப்பட்டது. இதே நேரத்தில், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடத்த திட்டமிட்ட நிலையில் அந்நாடு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், “எங்கள் நாட்டில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த வாருங்கள்” என அழைப்பு விடுத்துள்ளது. பிசிசிஐ இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளுமா? மீதமுள்ள போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You May Also Like

More From Author