அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் நிரந்தரமான தளம் ஒன்றை அமைக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் இதனை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளார்.
நாசாவின் 15வது நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ள ஜாரெட் ஐசக்மேன், சமூக வலைதளமான எக்ஸில் நிலவில் தளம் அமைக்க உள்ளதை உறுதிப்படுத்தினார்.
நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கியிருந்து ஆய்வு செய்வதற்கான சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
நாசாவின் இந்த அறிவிப்பிற்கு எலான் மஸ்க், அற்புதம் என்று ஒற்றைச் சொல்லில் தனது மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.
நிலவில் தளம் அமைக்க நாசா திட்டம்: எலான் மஸ்க் பெரும் மகிழ்ச்சி
