அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை. மாதாந்திர கூட்டம்

Estimated read time 0 min read

அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதாந்திர கூட்டம் மற்றும் (பொன்விழா) 50ஆம் ஆண்டுவிழா ஆலோசணைக் கூட்டம்
தனியார் திருமண. மண்டபத்தில் வைத்து நடைபெற்றது
கூட்டத்திற்கு
பேரவைத் தலைவர் புலவர் நீ.அய்யப்பன் தலைமை தாங்கினார், செல்வன் இசை மணி பாலா இறைவாழ்த்து பாடினான்.

பேரவை பொருளாளர் பாரதி கண்ணன் அனைவரையும் வரவேற்றார்

.துணைச்செயலர் செந்தில் குமரன் சென்றகூட்ட அறிக்கை வாசித்தார்.புன்னைவனநாறும்பூநாதன் குறள் சிந்தனை வழங்கினார்.திருவருள் லத்தீப் “நான் இருக்கிறேன்”எனும் தலைப்பில் சிற்றுரை வழங்கினார்.

பேரவைச் செயலர் இலட்சுமணன் “பாவேந்தரும் தமிழும்”எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். கவிஞர் பாப்பாக்குடி முருகன்,அகஸ்தியர்பட்டி லெட்சுமணன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் சேவையைப் பாராட்டி பேரவைக்கு “மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை விருது” வழங்கிய திருநெல்வேலி பேர்ட்ஸ் தொண்டு நிறுவனதிற்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.

பேர்ட்ஸ் தொண்டு நிறுவன அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.பேரவையின் 50 ஆம் ஆண்டுவிழா பொன் விழாவாக ஆகஸ்ட் திங்கள் 9,10ஆம் நாள்களில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

பேரவை இலக்கிய நிகழ்ச்சி அமைப்பாளர் இளங்கோ நன்றி கூறினார்..பேரா.செந்தில் குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.அய்யப்பன்,இலட்சுமணன் ஆகியோர் விருந்தளித்தனர்.பேரவைப் புரவலர்களும்,தமிழ் ஆர்வலர்களும் திரளாக நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author