இராகு பகவான் மீனத்தில் இருந்து கும்பத்திற்கும் கேது பகவான் கன்னியில் இருந்து சிம்மத்திற்கும் 18-05-2025 அன்று பெயர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் பெயர்ச்சி பலன்கள் 29-05-2025 பின்னிரவு முதலே தெரிய வரும்.

மேஷம் : இராகு பகவான் 11ம் இடத்திலும் கேது பகவான் 5ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
11ம் இடம் உப ஜெய ஸ்தானம் ஆகும், குரு பகவானின் 9ம் பார்வையை பெற்ற இராகு பகவானால் கனவுகள் நனவாகும் நல்ல பொற்காலம், நீண்ட நாட்கள் தடைபட்ட திருமணம் குழந்தை பேறு உத்தியோக மாற்றம் உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும் நல்ல காலம். புதிய நண்பர்கள் அமைவார்கள், தொழிலில் நல்ல இலாபம் பெறும் நல்ல காலம், மூத்த உடன்பிறப்புகளால் நல்ல ஆதரவு இலாபம் புகழ் செல்வம் தேடி வரும் நற்காலம்.
5ம் இடத்தில் கேது பகவானால் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படலாம். குழந்தைகள் தாய் தந்தையரை விட்டு படிப்புக்காகவோ திருமணத்திற்காகவோ உத்தியோகத்தின் நிமித்தத்தால் பிரிந்து வாழலாம். காதல் விஷயங்கள் தோல்வியில் முடியலாம். சூதாட்டம் இலாபம் தராது, புதிய விஷயங்கள் தொடங்க இது சாதகமான நேரம் அல்ல, பொருமையை கடைபிடிக்க வேண்டிய காலம்.
ரிஷபம் : இராகு பகவான் 10ம் இடத்திலும் கேது பகவான் 4ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
10ம் இடத்தில் அமரும் இராகு பகவானால் தொழிலில் நல்ல முன்னேற்றம் மேன்மை இலாபம் ஏற்படும் பொற்காலம். புதிய கிளைகள் தொடங்க சாதகமான வேலை. நல்ல வருமானம் வரும் நேரம். செல்வம் ஆபரணம் ஆடைகள் சேரும் நல்ல நேரம். சொத்துக்கள் சேரும் நேரம்.
4ம் இடத்தில் அமரும் கேது பகவானால் சுகஸ்தானம் பாதிக்கும் காலம், மன நிம்மதி குறைந்து காணப்படும் காலம். சுகம் கெட்டு வீடு ஊர் மாறும் காலம். வாகனங்களுக்கு / வீட்டிற்கு பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம், வயதான தாயின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கரை எடுக்க வேண்டும். சொத்துக்களால் இழப்புகள் நஷ்டங்கள் ஏற்படலாம் பொருமை கடைபிடிக்க வேண்டிய காலம்.
.மிதுனம் : இராகு பகவான் 9ம் இடத்திலும் கேது பகவான் 03ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
09ம் இடத்தில் அமர்ந்த இராகு பகவானால் தெய்வீக ஈடுபாடு அதிகமாகும் காலம். தூர தேச பயணங்கள் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.. கல்வி தொழில் உத்தியோகம் சுற்றுலா சம்பந்தமான பயணங்கள் ஏற்படலாம். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும் நற்காலம். வயதான தந்தை தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குரு பகவானின் பார்வையினால் பெரிய கஷ்டங்கள் ஏற்படாது.
3ம் இடத்தில் அமர்ந்த கேது பகவானால் இளைய உடன்பிறப்புகளுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை, அவர்களுடனான உறவில் பின்னடைவு ஏற்படலாம். சிறு தூர பயணங்கள் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்ல வேண்டிய காலம். முயற்சிகளில் பின்னடைவு ஏற்படலாம். கலைத்துறையில் சேர விரும்புவோருக்கு இப்பொழுது நேரம் சாதகமாக இல்லை.
கடகம் : இராகு பகவான் 8ம் இடத்திலும் கேது பகவான் 2ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
8ம் இடத்திதல் அமர்ந்த இராகு பகவானால் திடீர் அதிர்ஷ்டங்கள் பண வரவுகள் ஏற்படலாம். வீட்டில் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் அவமானங்கள் வம்பு வழக்குகள் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருந்தாலும், குரு பகவானின் பார்வை உள்ளதால் பெரிய துன்பங்கள் ஏற்படாது.
2ம் இடத்தில் அமர்ந்த கேது பகவானால் குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கும் எனவே விட்டு கொடுத்து செல்ல வேண்டிய காலமாகும். பண வரவில் சற்று பின்னடைவு ஏற்படும் காலம். கொடுத்த வாக்கை காப்பாற்ற கடினமாக உழைக்க வேண்டிய காலம். பல வழிகளில் வருமானம் வந்தாலும் வந்த வழியே போகவும் செய்யும். குடும்பத்தில் செலவுகள் அதிகரித்து சேமிப்பு குறைந்து இருக்கக்கூடிய காலம்.
சிம்மம் : இராகு பகவான் 7ம் இடத்திலும் கேது பகவான் இராசியில் பெயர்ச்சி அடைகிறார்கள்.
7ம் இடத்தில் அமர்ந்த இராகு பகவானால் பொது வாழ்க்கையில் நல்ல வெற்றி ஏற்படும் காலம். திருமண சுப நிகழ்ச்சிகள் நிறைவேரும் காலம். கூட்டுத் தொழிலில் நல்ல இலாபம் ஏற்படலாம். புதிய நண்பர்கள் கிடைக்கும் காலம். குடும்ப வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது மேன்மையைத் தரும்.
இராசியில் அமர்ந்த கேது பகவானால் மனதில் அமைதி இல்லாமல் மன சஞ்சலங்களுடன் இருக்கும் காலம். தன்னம்பிக்கை குறைந்து காணப்படலாம். சிந்தனையில் தெளிவற்று குழப்பங்கள் நிறைந்து இருக்கும் காலம். புதிய முடிவுகளை எடுப்பதில் சிரமங்கள் தாமதம் ஏற்படும். பல இடையூறுகளை சந்திக்க வேண்டிய வேலை. ஆகையால் நம்பிக்கை இழக்காமல் தைரியத்துடன் செயல்பட வேண்டிய காலம்.
கன்னி : இராகு பகவான் 6ம் இடத்திலும் கேது பகவான் இராசிக்கு 12ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
6ம் இடத்தில் அமர்ந்த இராகு பகவானால் புதிய கடன்கள் கிடைக்க மிகவும் சாதகமான காலம். வியாபாரம் படிப்பு வீடி கட்டுதல் வண்டி வாகனம் வாங்குதல் போன்றவைக்காக கடன் கிடைக்க சாதகமாக இருக்கும். நீண்ட நாள் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்த உடல்உபாதைகள் நீங்கும் நல்ல காலம். வம்பு வழக்குகளிள் வெற்றி உண்டாகும் காலம். உத்திநோகத்தில் நல்ல மேன்மை கிடைக்கும் காலம். உடல் நலத்தில் தொந்தரவு ஏற்பட்டாலும் அதிலிருந்து பூர்ணமாக குணமாகும் நல்ல காலம்.
இராசிக்கு 12ம் இடத்தில் அமர்ந்த கேது பகவானால் விரையச் செலவுகள் ஏற்படும் காலம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் படிப்பு மருத்துவம் சம்மந்தப்பட்ட செலவுகள் ஏற்படலாம். ஏழை எளியோருக்கு உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்து வந்தால் மன நிம்மதி அமைதி பெறலாம். தியாகம் சுயக்கட்டுப்பாடு உண்டாகும் நேரம்.
துலாம் : இராகு பகவான் 5ம் இடத்திலும் கேது பகவான் இராசிக்கு 11ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
5ம் இடத்தில் அமர்ந்த இராகு பகவானால் குழந்தை பிறப்பில் தடைகள் தாமதம் இருந்தாலும், குரு பகவானின் பார்வையால் குழந்தை பாக்கியம் கிடைக்க நல்ல நேரம். காதல் விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் பிரிவு ஏற்பட்டு பின்பு ஒன்று சேர்ந்து வாழும் காலம். குல தெய்வ கோவில் வழிபாடு நிறைவேரும் காலம். பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய காலம்.
11ம் இடத்தில் அமர்ந்த கேது பகவானால் மூத்த உடன் பிறப்பின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை,. அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழிலில் இலாபம் குறைந்து காணப்படலாம். சுற்றத்தாரின் உரவு முறையில் பாதிப்பு ஏற்படலாம். ஒதுங்கி இருப்பதே நல்லது. அமைதியாக இருக்க வே்ண்டிய காலம்.
விருச்சிகம் : இராகு பகவான் 4ம் இடத்திலும் கேது பகவான் இராசிக்கு 10ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
4ம் இடத்தில் அமர்ந்த இராகு பகவானால் குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மை காணப்பட்டாலும், பிற்பகுதியில் ஒருவரை ஒருவர் புரிந்து நலமாக வாழும் காலம். தாயிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. வீடு வண்டி வாகனம் மற்றும் தாயின் மருத்துவத்திற்கான செலவுகள் செய்யக்கூடிய காலம். மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பின்னர் தெளிவு கிடைத்து அமைதியாக இருப்பர்.
இராசிக்கு 10ம் இடத்தில் அமர்ந்த கேது பகவானால் தொழிலில் மாற்றம், வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம். சுயக்கட்டுப்பாடு அவசியம். அனைத்திலும் தடைகளை கடந்து செல்லும் காலம். மற்றவர்களுக்காக பாடுபடும் காலம். புதிய தொழில் கிளைகள் திறப்பதில் தாமதம் இருந்தாலும் சாதகமான வேலைத்தான்.
தனுசு : இராகு பகவான் 3ம் இடத்திலும் கேது பகவான் இராசிக்கு 09ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
3ம் இடத்தில் அமர்ந்த இராகு பகவானால் இளைய உடன் பிறப்புகளால் ஆதாயம் புகழ் மேன்மை கிடைக்கும் காலம். முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளை கொடுக்கும் வேலை. கலைத்துறையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல்ல காலம். தன்னம்பிக்கை தைரியம் மிகுதியாக காணப்படும் காலம். சுற்றுலா சிறு தூர பயணங்களால் இலாபம் ஏற்படலாம். கூட்டுத் தொழில் சிறப்படையும், தொழில் வியாபாரம் எழுத்து பத்திரிக்கை தொழிலில் மேன்மை ஏற்படலாம்.
இராசிக்கு 9ம் இடத்தில் அமர்ந்த கேது பகவானால் உயர் கல்வியில் தடை ஏற்படலாம். நீண்ட தூர பயணம் இலாபம் தராது. மத நம்பிக்கை குறையலாம். பெரியோர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம், வந்தான தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயலாரிடம் உதவி பெறலாம்.
மகரம் : இராகு பகவான் 2ம் இடத்திலும் கேது பகவான் இராசிக்கு 08ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
இரண்டாம் இடத்தில் அமர்ந்த இராகு பகவானால் குடும்பத்தில் அவ்வப்பொழுது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், பேச்சால் கீர்த்தி கெடலாம், கண் சம்பந்தபட்ட நோய்கள் ஏற்படலாம், செலவுகள் மிகுந்த காலம். விட்டுக்கொடுத்து செல்லுதல் நன்மையை கொடுக்கும்.
கோபத்தை தவிர்த்து செயல்படுதல் நன்றி. குரு பகவானின் பார்வை இருப்பதால் சிறு சிறு சஞ்சலங்களோடே நிவர்த்தி பெரும் காலம்.
8ம் இடத்தில் கேது பகவான் அமர்வதனால் நெருங்கிய உறவினர்களுக்கு உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பண வரவு அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் காலம். புதிய கடன்கள் எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். அன்னிய மொழி பேசுபவரால் ஆதாயம் ஏற்படலாம் ஆனால் கவனம் தேவை. வம்பு வழக்குகள் ஏற்படின் கவனத்தோடு செயல் பட வேண்டிய காலம்.
கும்பம் : இராகு பகவான் இராசியிலும் கேது பகவான் இராசிக்கு 7ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
இராசியில் சஞ்சரிக்கும் இராகு குரு பகவானின் பார்வையினால் தன்னம்பிக்கை அதிகமாகும் காலம். தன் வழியே நல்ல வழி என்று நினைக்கும் காலம். சுய தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை அவ்வப்பொழுது சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு பின் விலகும். மனதலவில் அழுத்தம் ஏற்படும் காலம். முடிவு எடுப்பதில் குழப்பம், தேவையில்லாத சிந்தனைகள் ஏற்படும் காலம்.
7ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் கணவன் மனைவியிடத்தில் விட்டு கொடு்த்து செல்லுதல் அவசியம். பிடிவாத குணத்தை விடுத்து பொருமையை கையாளுதல் சிக்கல்களை தவிர்க்கும். கூட்டு வியாபாரத்தில் கவனம் தேவை. நண்பர்களிடம் கவனமாக செயல்படுங்கள். திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை தாமதம் உண்டாகும் காலம். கொடுத்த கடன் திரும்புவதில் தாமதம் ஏற்படலாம். வைராக்கியத்தினால் வம்பு வழக்குகள் ஏற்படலாம் ஆகையால் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்லுதல் இன்னல்களைத் தவிர்க்கும்.
மீனம் : இராகு பகவான் இராசிக்கு 12ம் இடத்திலும் கேது பகவான் இராசிக்கு 6ம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
12ம் இடத்தில் அமர்ந்த இராகு பகவானால் அன்னிய தேசத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உத்தியோகஸ்தார்ர்களுக்கு நல்ல காலம்… வீன் அலைச்சல் உண்டாகும். பணச்செலவுகள் கூடும் காலம் மற்றவர்களுக்காக பாடுபடும் காலம். அதனால் மனசஞ்சலம் உடல் சோர்வுகள் ஏற்படலாம். மறை பொருள் அறியும் காலம். ஜோதிடம் மத்திரம் தந்திரம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு திறமை வெளிப்படும் காலம். கணவர் மனைவி இடத்தில் வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு சில காரணத்தினாலோ பிரிந்து இருக்கும் காலம். தூக்கம் கெடும் அதனால் உடல் நலம் கெடும் காலம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
6ம் இடத்தில் ச்ஞ்சரிக்கும் கேது பகவானால் நீண்ட நாட்கள் இருந்து வந்த உடல் உபாதைகள், கடன் வம்பு. வழக்குகள் முடிவுக்கு வரும் நல்ல காலம். உத்தியோகத்தில் கீர்த்தி உண்டாகும், நல்ல புகழ் மேன்மை ஏற்படும் காலம். சத்ருக்களை வெல்லும் நல்ல காலம். மாணவர்களுக்கு நல்ல அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் வருமானம் கூடும். வெளியூர் பயணம் இலாபத்தை தரும் காலம். அரசு அரசு சார்ந்த வேலைகளில் உள்ளவர்கள் கவனமாக செயல் பட வேண்டிய காலம்.
குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் பொதுவான இராசியை மையமாக கொண்டு சொல்லப்பட்ட பலன்களே., தனிப்பட்ட நபரின் ஜாதக அமைப்பு மற்றும் தசா புத்திகளின் அமைப்பிற்கு ஏற்ப பலன்கள் மாறுபடலாம்.
பொதுவாக இந்த பெயச்சியில் குரு பகவானின் பார்வை பலம் ஒரு வருட காலம் இராகு பகவானின் மேல் விழுவதால் முதல் ஒரு வருட காலம் எந்த சவால்கள் வந்தாலும் முடிவு சுபமாகவே இருக்கும், குரு பகவான் வருகின்ற பத்து – பண்ணிரென்டாம் மாதம் வரை அதிசாரத்தில் கடகத்தில் பெயர்ச்சி அடையும் காலம் சற்று கவனமாக இருக்க வேண்டும், மேலும் அடுத்த வருடம் ஆறாம் மாதம் முதல் வருட இறுதி வரை சற்று கவனம் பொருமையோடு செயல்படுதல் இன்னல்களைத் தவிர்க்கும். . கேது பகவானிற்கு மே மாதம் இருதி வரை உச்ச சுக்கிரன் பார்வை இருப்பதால் கெடு பலன்கள் அதிகம் இருக்காது. விநாயகர் குரு வழிபாடு இடர்களை தவிர்த்து நற்பலன்கள் கிடைக்க இதவும். தியானம் நோக பயிற்ச்சிகள் மன கவலைகளிடம் இருந்து விடுபட உதவும். அறிமுகம் இல்லாதவர்களிடம் சற்று கவனத்தோடும் நெருங்கியவர்களோடு பொருமைநாக பக்குவமாக கோபங்களைத் தஙிர்த்து பழகி வந்தால் வெற்றி நிச்சயம்.
சுபம் !!!
தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்
சென்னை.
9566620842 / 9944443215
Mail ID : astromanibharathy@gmail.com