சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!

Estimated read time 1 min read

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில், பிரதோஷம், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறையினரும் கோயில் நிர்வாகத்தினரும் அனுமதி அளித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்து நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனுமதிக்கப்பட்ட நாட்களில் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. ஆதலால் சாமி தரிசனம் முடித்தவுடன் அடிவாரப்பகுதிக்கு இறங்கி விட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author