2026-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ‘கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்’ (CFR) எனும் புகழ்பெற்ற ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாதச் செயல்கள் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதற்கு “மிதமான வாய்ப்பு” இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த மே மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ‘போர்’ சூழல் ஏற்பட்டதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த ஆண்டில் இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமாம்!
