30 ஆண்டுகளில் 23 ஜேஇஇ டாப்பர்கள் வெளிநாட்டில் குடியேறியது ஏன்? அதிர்ச்சித் தகவல்  

Estimated read time 1 min read

இந்தியாவின் மிக உயரிய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

‘Careers 360’ நடத்திய இந்த ஆய்வின்படி, 1990 முதல் 2021 வரையிலான 31 ஆண்டுகளில் முதலிடம் பிடித்தவர்களில் 23 பேர் தற்போது வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் தங்களது முதுகலை அல்லது பிஹெச்டி படிப்பை வெளிநாடுகளிலேயே முடித்துள்ளனர்.

இது இந்தியாவின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சூழலில் உள்ள பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

You May Also Like

More From Author