குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Estimated read time 0 min read

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

More From Author