சீனப் பாணியிலான நவீனமயமாக்க வளர்ச்சி சிந்தனை, சீன-பசிபிக் தீவுகள் உறவு, பசிபிக் தீவுகளில் சீன-அமெரிக்க செல்வாக்கு முதலியவற்றை மதிப்பிடும் வகையில், சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிலையம், 10 பசிபிக் தீவுகளைச் சேர்ந்த 1000 மக்களிடம் கருத்து கணிப்பை நடத்தியது. பபுவா நியு கிரியா, ஃபிஜி, சோலொமன் தீவுகள் இக்கருத்துக் கணிப்பில் பங்கெடுத்தன.
இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 96.2 விழுக்காட்டினர் சீனா, வெற்றியடைந்த நாடு என்று கருத்தினர். சீனாவின் மாபெரும் சந்தை, தங்களது நாடுகளுக்கும் வாய்ப்பாக அமைகிறது என்று 93.6 விழுக்காட்டினர்கள் கருத்தினர்.
வலுவான அறிவியல் தொழில் நுட்ப ஆற்றல் சீனாவுக்கு உள்ளது என்று 91.4 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர். சீன-பசிபிக் தீவுகள் உறவு சீராக வளர்ந்து வருகிறது என்று 94.3 விழுக்காட்டினர்கள் கருதினர். சீனா, வலுவான சர்வதேச செல்வாக்கு வாய்ந்த நாடாகும் என்று 83.1 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர்.