தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு  

தமிழகத்தில் தினசரி 10 முதல் 15 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
எனினும், இவை அனைத்தும் குறைந்தபட்ச வீரியமுள்ள வைரஸ் தொற்றுகள் என்பதால், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் 1,000க்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில மாநிலங்களில் -குறிப்பாக கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா -சமீபத்தில் ஆறு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரும், கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளுக்காக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது பொதுமக்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author